Home Featured கலையுலகம் திட்டமிட்டபடி மலேசியாவில் இன்று புலி வருமா?

திட்டமிட்டபடி மலேசியாவில் இன்று புலி வருமா?

935
0
SHARE
Ad

puli1-600x300கோலாலம்பூர் – புலி வருது.. புலி வருது.. என்று சொல்லி மக்களிடையே பலமான எதிர்பார்ப்புகள் உண்டான பிறகு, இன்று புலி திரைப்படம் வெளியாகவேண்டிய நாளில் அப்படத்தை முந்திக் கொண்டு சிக்கல் தான் வந்துள்ளது.

இன்று அக்டோபர் 1 உலகமெங்கும் புலி வெளியாக வேண்டிய நாள், ஆனால் சொல்லி வைத்தார் போல் நேற்று நடிகர் விஜய், புலி தயாரிப்பாளர் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.

இரவு வரை நீடித்த சோதனையால்,  இன்று திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

புலி திரைப்படத்தின் முதல் காட்சி தமிழகம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலையிலேயே திரையரங்குகள் முன்பு குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். சில இடங்களில், திரையிட வலியுறுத்தி சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் விடியற்காலையில் திரையிடப்படவிருந்த காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கங்களில் தெரிவிக்கப்பட்டதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மலேசியாவில் இன்று முதல்காட்சி வெளியாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் முக்கிய சினிமா திரையரங்குகளும் புலி படத்திற்கான பிரச்சனை நீங்கி வெளியிடும் அதிகாரப்பூர்வ உத்தரவிற்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இணையதளங்கள் வாயிலாக முன்கூட்டியே அனுமதிச் சீட்டு பதிவு செய்யும் முறையும் செயல்படவில்லை.