Home Featured நாடு அக்டோபரில் பெட்ரோல், டீசல் விலை 10 காசு அதிகரிப்பு

அக்டோபரில் பெட்ரோல், டீசல் விலை 10 காசு அதிகரிப்பு

577
0
SHARE
Ad

petrol-pumpகோலாலம்பூர்- பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 10 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது அக்டோபர் மாதம் முழுவதும் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலகச் சந்தை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை அவ்வப்போது மாற்றி அமைப்பது எனும் முடிவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளூர் வர்த்தகம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு எடுத்தது. அதன்படி ஒவ்வொரு மாத இறுதியிலும் விலைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை 10 காசு உயர்த்தப்பட்டுள்ளது.
ரோன் 95, ரோன் 97 பெட்ரோல் வகைகளின் விலை லிட்டருக்கு 2.05 ரிங்கிட் மற்றும் 2.45 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதே போல் சாதாரண டீசல் விலை லிட்டருக்கு 1.90 ரிங்கிட் எனவும், யூரோ 5 டீசல் வகை 2 ரிங்கிட் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.