கொழும்பு – இலங்கை தலைநகர் கொழும்புவில், கடந்த 1999-ம் ஆண்டு, அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது அவரை கொலை செய்வதற்காக தற்கொலைப் படைத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 26 பேர் பலியாகினர். சந்திரிகா உட்பட 80 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த வேலாயுதம் வரதராஜா, சந்திரா ரகுபதி ஆகிய இருவருக்கும் கொழும்பு நீதிமன்றம் நேற்று 290 மற்றும் 300 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அவர்கள் இருவரும், தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த உதவியது விசாரணையில் நிரூபணமானதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.