Home கலை உலகம் அமெரிக்காவில் புலி படத்தின் முதல் காட்சி ரத்தானது!

அமெரிக்காவில் புலி படத்தின் முதல் காட்சி ரத்தானது!

485
0
SHARE
Ad

puli2லாஸ் ஏஞ்சல்ஸ் – விஜய்-ஸ்ரீதேவி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புலி படம் உலகம் எங்கும் இன்று (1-ம் தேதி) வெளியாக உள்ள நிலையில், அப்படத்தின் தெலுங்கு பதிப்பின் முதல் காட்சி அமெரிக்காவில் ரத்தாகி உள்ளது.

அமெரிக்காவில் தமிழ் படங்களை விநியோகிக்கும் அட்மஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் புலி படத்தின் தெலுங்கு பதிப்பை வாங்கி வெளியிட உள்ளது. இந்நிலையில், அங்கு தெலுங்கி திரை அரங்குகளுக்கு அனுப்ப வேண்டிய தெலுங்கு பதிப்பிற்கு பதிலாக தமிழ் பதிப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதால், முதல் காட்சியை ரத்து செய்துள்ளோம் என அட்மஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கான பணிகளை மேற்கொண்ட டெக்னிகலர் நிறுவனத்தின் கவனக்குறைவால், இந்த தவறு நடந்துள்ளதால் தங்களுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அட்மஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.