சென்னை பல்லாவரத்தில் உள்ள சமந்தாவின் வீட்டில் அதிகாரிகளின் சோதனை நடைப்பெற்றுக் கொண்டிருந்த போது, பத்திரிக்கையாளர்கள் கேமராவுடன் சமந்தாவின் தாயாரிடம் பேட்டி காணச் சென்றனர். அப்போது, சமந்தாவின் சகோதரர் பத்திரிக்கையாளரை தாக்கினார். பத்திரிக்கையாளர்களும் விடாமல் அவரை எதிர்த்துக் கேள்வி கேட்டனர்.
இதற்கிடையே, அங்கு வந்த சமந்தாவின் தந்தை, தனது மகளின் நிழலில் தாங்கள் வாழவில்லை என்றும், சமந்தா எப்போதும் சரியாக வரி கட்டிவிடுவார் என்றும் கூறினார். மேலும், சோதனையில் எத்தகைய முறையற்ற பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.