Home Featured தொழில் நுட்பம் 140 எழுத்துக்கள் என்ற வரம்பினை நீக்கும் முடிவில் டுவிட்டர்!

140 எழுத்துக்கள் என்ற வரம்பினை நீக்கும் முடிவில் டுவிட்டர்!

585
0
SHARE
Ad

twitterகோலாலம்பூர் – டுவிட்டரில் 140 எழுத்துக்களுக்குள் தான் பயனர்கள் தங்கள் பதிவுகளை இட வேண்டும் என்ற வரம்பினை நீக்க டுவிட்டர் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நட்பு ஊடகங்களில் சற்றே வித்தியாசமான வரம்பினை கொண்டிருப்பது என்றால் அது டுவிட்டர் தான். எத்தகைய பதிவுகளாக இருந்தாலும் அதனை 140 எழுத்துக்களுக்குள் சுருக்கி பதிவு செய்ய வேண்டும் என்பதை டுவிட்டர் நிறுவனம் ஆரம்பம் முதலே கடைப்பிடித்து வருகிறது. சில சமயங்களில் இது சாதகமான ஒன்றாக இருந்தாலும், பல தருணங்களில் மனதில் நினைத்தை சுதந்திரமாக பதிவு செய்ய முடியாமல், இந்த வரம்பு பயனர்களை எரிச்சல் அடையச் செய்கிறது.

இதனால் பெரும்பாலான பயனர்கள் டுவிட்டரைக் காட்டிலும் பேஸ்புக்கை தான் அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில் தான், புதிய தயாரிப்பு ஒன்றின் மூலம் இந்த வரம்பினை நீக்க டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக இன்னும் சில காலம் பிடிக்கலாம்.