கோலாலம்பூர் – “ரெண்டு, மூனு போக்குவரத்து சம்மன் தானே.. காப்புறுதி எடுக்கும் போது கேட்டாப் பார்த்துக்கலாம்” என்று அசட்டையாக இருக்கும் வாகனமோட்டிகளைக் கண்டுபிடிப்பதற்கென்றே புதிய திட்டங்களுடன் கிடிக்கிப்பிடி போட வருகின்றது போக்குவரத்து காவல்துறை.
அடுத்த இரண்டு மாதங்களில் 20 தானியங்கி நம்பர் பிளேட் (வாகன எண் தட்டு) கண்டறியும் கேமராக்களை பயன்படுத்தி அபராதம் செலுத்தாதவர்களைக் கண்டறியவுள்ளது.
அந்தக் கேமாரக்களை எந்த ஒரு காவல்துறை வாகனத்திலும் பொருத்தி, முன்னே செல்லும் வாகனத்தின் உரிமையாளர் மற்றும் அவருக்கு உள்ள போக்குவரத்து அபராதங்கள் குறித்த தகவல்களை புக்கிட் அம்மான் தரவுகளிலிருந்து பெறலாம்.
மேலும், நாட்டிற்குள் நுழையும் 9 நுழைவு மற்றும் வெளியேறும் மையங்களிலும் அந்த கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
இது குறித்து கூட்டரசு போக்குவரத்து காவல்துறைத் தலைமை மூத்த துணை ஆணையர் டத்தோ முகமட் புவாட் அப்துல் லத்தீப் கூறுகையில், “ஒட்டுமொத்தமாக 1.06 மில்லியன் சம்மன்கள் இன்னும் செலுத்தப்படாமல் உள்ளன. அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கவே நாங்கள் இதை கொண்டு வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
படம்: நன்றி ‘ஸ்டார்’ இணையதளம்