கோலாலம்பூர் – நாட்டில் ஏற்பட்டிருக்கும் புகைமூட்டத்தைத் தணிக்க செயற்கை மழையை உருவாக்கும் முயற்சியில் வீரியமிக்க ரசாயனத்தை மலேசிய விமானப் படை பயன்படுத்துவதாக நட்பு ஊடகங்களில் வழியாகப் பரவிய செய்தியை தற்காப்பு அமைச்சு மறுத்துள்ளது.
இது குறித்து தற்காப்பு அமைச்சின் பிரதிநிதி படைத்தலைவர் கரிமா அவி கூறுகையில், “அது தவறான செய்தி. வானிலை ஆய்வு மையத்திற்கு மட்டுமே அந்த ரசாயனம் குறித்த தகவலை கூறும் பொறுப்பில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் அமைச்சர் டத்தோ மாத்யூஸ் தாங்காவ் கூறுகையில், “செயற்கை மழைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் ரசாயனத்தின் பெயர் நாட்ரியம் குளோரைடு அல்லது உப்பு. அந்த உப்பு பாதுகாப்பானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளையோ மக்களின் உடல்நலத்திற்கோ எந்தக் கெடுதலையும் ஏற்படுத்தாது” என்று தெரிவித்துள்ளார்.