ஹாங் காங்கின் கொவ்லூன் நகர காவல்துறைக்கு கடந்த 3-ம் தேதி காலை, அந்நகரத்தில் இருக்கும் மெக்டொனால்ட் உணவக பணியாளரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், தங்கள் உணவகத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் மயங்கிக் கிடப்பதாகக் கூறப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்மணியை சோதனை செய்த போது அவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
பல மணி நேரங்களாக ஒருவர் இறந்து கிடந்துள்ள நிலையில், மெக்டொனால்ட் பணியாளர்கள் அங்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவதிலேயே கவனம் செலுத்தியுள்ளது, அந்நகர மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.