மேலும் மலேசியாவில் 2025 ஆண்டு வரை 1.4 பில்லியன் ரிங்கிட் கூடுதலாக முதலீடு செய்யவும் மெக்டொனால்ட் திட்டமிட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 200 மில்லியன் ரிங்கிட் வரை மெக்டொனால்ட் முதலீடு செய்துள்ளது.
இந்த விவரங்களை மெக்டொனால்ட் உணவகங்கள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநரும் மலேசியப் பங்குதாரருமான அஸ்மிர் ஜபார் தெரிவித்தார்.
மெக்டொனால்ட் நிறுவனம் இந்த ஆண்டு 15 விழுக்காடு வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுமையிலும் 2025-ஆம் ஆண்டுக்குள் மேலும் புதிய 170 புதிய உணவகங்களைத் திறக்க மெக்டொனால்ட் திட்டமிட்டுள்ளது. அதே வேளையில் 200 நடப்பு உணவகங்களை புதுப்பிக்கவும் திட்டங்கள் வரையப்பட்டுள்ளன. இதன்மூலம் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
கார்கள் மூலம் நேரடியாக சென்று உணவுகளை வாங்கும் 20 உணவகங்களையும் மெக்டொனால்ட் கூடுதலாக நிறுவும். ஏற்கனவே இத்தகைய 167 கார்கள் மூலம் வாங்கும் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது மலேசியாவில் 278 மெக்டொனால்ட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 13.5 மில்லியன் பயனர்கள் இந்த உணவகங்களினால் பயனடைந்து வருகின்றனர்.