Home நாடு தமிழகத்தின் மருத்துவர் கு.சிவராமன் கோலாலம்பூரில் உரை

தமிழகத்தின் மருத்துவர் கு.சிவராமன் கோலாலம்பூரில் உரை

1436
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தமிழர்களின் பாரம்பரிய உணவுகள், சித்த வைத்திய முறைகள் குறித்து தொடர்ந்து உரைகள் நிகழ்த்தியும், கட்டுரைகள் எழுதியும் வரும் மருத்துவர் கு.சிவராமன் கோலாலம்பூரில் “உடல், மன நலம் மற்றும் சமூக நலம்” என்ற தலைப்பில் உரையொன்றை நிகழ்த்தவிருக்கிறார்.

கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஒரு பிரிவாகச் செயல்படும் – கீழ்க்காணும் முகவரியில் அமைந்திருக்கும் – இந்தியக் கலாச்சார மையத்தில், நாளை சனிக்கிழமை மே 4-ஆம் தேதி காலை 9.30 மணி முதற்கொண்டு இந்த உரை நிகழ்ச்சி நடைபெறும்:

Netaji Subhash Chandra Bose Indian Cultural Centre,

#TamilSchoolmychoice

Menara Sentral Vista, No. 17-2 &17-3A,

No.150 Jalan Sultan Abdul Samad,

50470 Brickfields, Kuala Lumpur.

இலவசமாக நடைபெறும் இந்த உரை நிகழ்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.