Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவில் 169 மெக்டோனால்ட் கிளைகள் மூடப்பட்டன!

இந்தியாவில் 169 மெக்டோனால்ட் கிளைகள் மூடப்பட்டன!

1385
0
SHARE
Ad

McDonald'புதுடெல்லி – பிரபல மெக்டோனால்ட் உணவுக் கடைகள் உலகம் முழுவதும் தனது கிளைகளை விரித்து பலத்தரப்பட்ட மக்களையும் தனது பிரத்தியேக உணவு வகைகளால் கவர்ந்து வருகின்றது.

இந்தியா போன்ற நாடுகளில் சைவப் பிரியர்கள் அதிகம் இருப்பதால், சைவத்திலும் பல உணவுகளை விற்பனை செய்து வருகின்றது.

இந்நிலையில், வர்த்தக உரிமத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தற்போது வடக்கு, கிழக்கு இந்தியாவில் இருந்து சுமார் 169 கிளைகளை மூடியிருக்கிறது.

#TamilSchoolmychoice

காரணம், உரிமைத் தொகையை அந்த 169 கிளைகளும் செலுத்தத் தவறியதால், அக்கடைகளை தாங்கள் மூட உத்தரவிட்டதாக அமெரிக்காவில் உள்ள மெக்டோனால்ட் தலைமையகம் அறிவித்திருக்கிறது.