Home இந்தியா சிறையிலிருந்து அமைச்சர் வீட்டுக்குச் சென்றாரா சசிகலா?

சிறையிலிருந்து அமைச்சர் வீட்டுக்குச் சென்றாரா சசிகலா?

758
0
SHARE
Ad

Sasikalaபெங்களூர் – சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவிற்கு, சிறையில் சகல வசதிகளும் செய்யப்பட்டதாக அண்மையில் டிஐஜி ரூபா குற்றம் சாட்டினார்.

அதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்தார். ஆனால் அதனை சிறை நிர்வாகம் மறுத்ததோடு, டிஐஜி ரூபாவையும் இடமாற்றம் செய்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ரூபா சமர்ப்பித்த மற்றொரு ஆதாரத்தில், சசிகலா, கையில் பையுடன் சிறையின் நுழைவு வாயில் அருகே நடந்து வருவது போலான காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.

#TamilSchoolmychoice

எனவே, சசிகலா சிறையிலிருந்து வெளியாகி, ஓசூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினரின் வீட்டிற்குச் சென்று வந்திருக்கலாம் என ரூபா புதிய குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.