Home நாடு செப்டம்பர் 5-ல் ஓய்வு பெறுகிறார் காலிட்!

செப்டம்பர் 5-ல் ஓய்வு பெறுகிறார் காலிட்!

933
0
SHARE
Ad

khalidகோலாலம்பூர் – தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் வரும் செப்டம்பர் 5-ம் தேதியோடு, 60 வயதை எட்டுவதால் ஓய்வு பெறுகிறார்.

கடந்த 2013-ம் ஆண்டு, ஓய்வு பெற்ற இஸ்மாயில் ஓமாருக்குப் பதிலாக, புதிய காவல்படைத் தலைவராக நியமிக்கப்பட்ட காலிட், கடந்த 4 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“இது என்னுடைய சுய விருப்பம். ஓய்வு எடுக்கும் நேரம் வந்துவிட்டது” என்று மலாய் நாளேடு ஒன்றுக்கு அளித்த தகவலில் காலிட் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, துணை காவல்படைத் தலைவரான நூர் ரசீத் இப்ராகிம் (வயது 59) காலிட்டுக்குப் பதிலாகப் பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகின்றது.