Home நாடு உள்ளூர் பட்டதாரிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் வரவேற்கத் தக்கது!

உள்ளூர் பட்டதாரிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் வரவேற்கத் தக்கது!

755
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உள்ளூர் பட்டதாரிகளுக்கு 700 ரிங்கிட்டிலிருந்து 1,000 ரிங்கிட்டுக்கு இடையிலான ஊக்கத்தொகையை வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதை பல்வேறு பொருளாதார ஆய்வாளர்கள் வரவேற்றுள்ளனர்.

ஒருவேளை இம்முறை அமல்படுத்தப்பட்டால், 3டி தொழிற்துறைகளில் அதிகமான உள்ளூர் பட்டதாரிகள் வேலைப் புரியும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், இத்துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் இயலும் என துன் அப்துல் ரசாக் பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் டாக்டர் பார்ஜோயாய் பார்டாய் கூறியுள்ளார்.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், நாட்டின் நிதி நிலையை சீர்படுத்தி, ஆண்டுக்கு 60 பில்லியன் ரிங்கிட் பணம் வெளிநாடுகளுக்குச் செல்வதை தவிர்க்கலாம் எனவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

புதிதாகப் பட்டம் பெற்ற உள்ளூர் பட்டதாரிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகைகளை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் இன்னும் ஆராய்ந்து கொண்டிருப்பதாக பிரதமர் மகாதீர் முகமட் நேற்று வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.