Home Featured இந்தியா ‘மாதொருபாகன்’ நாவலுக்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு உயரிய விருது!

‘மாதொருபாகன்’ நாவலுக்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு உயரிய விருது!

785
0
SHARE
Ad

சென்னை – ‘மாதொருபாகன்’ என்ற நாவலை எழுதி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளான எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய நூல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான “சமன்வே பாஷா சம்மன்” விருது வழங்கப்பட்டுள்ளது.
06-1444105572-perumal-murugan-1-600
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற 5 ஆவது இந்திய மொழிகளுக்கான நூல் திருவிழாவில் (Fifth Indian Languages Festival) சமன்வே பாஷா  சம்மன் விருதுக்கு மாதொருபாகன் நாவல் தேர்வுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதம் 26 முதல் 29 -ம் தேதி வரை நடைபெற உள்ள இந்திய மொழிகளுக்கான திருவிழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், “மாதொருபாகன் நாவலுக்கு வழங்கப்பட உள்ள இந்த விருது, ஒரு எழுத்தாளன் இந்த சமூகத்திற்கு எப்படி சேவையாற்ற வேண்டும் என்பதற்கும், வரலாற்றை சமகால உண்மைகள் மற்றும் கனவுகளோடு எப்படி இணைப்பது என்பதற்கும் ஓர் அங்கீகாரமாக விளங்கும்” என்று பெருமாள் முருகன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice