கோலாலம்பூர் – வரும் அக்டோபர் 10-ம் தேதி, சனிக்கிழமை, மலாக்காவிலுள்ள தாமான் மெலாக்கா ராயா என்ற பகுதியில் பேரணி நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என அதன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் மலாய் மூத்த இராணுவப் பணியாளர்கள் சங்கத் தலைவர் மொஹமட் அலி பஹாரோம் கூறுகையில், கடந்த அக்டோபர் 1-ம் தேதி, குடிநுழைவுத்துறை அதிகாரிகளுடன் ‘சீன குண்டர்கள்’ தாக்கியதை சம்பவத்தை முன்வைத்தே தான் இதைக் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலைக் கண்டிக்கவே இப்பேரணி நடத்தப்படவுள்ள நிலையில், மொஹமட் அலி என்ற அலி டிஞ்சு, “அந்த நாளில் மெலாக்கா ராயா பாதுகாப்பானது கிடையாது” என்று எச்சரிக்கிறார்.
அதற்காகத் தான் நிச்சயமாக கலவரம் வெடிக்கும் என்று கூறவில்லை எனக் குறிப்பிடும் மொஹமட் அலி, முன் ஏற்பாடுகள் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 1-ம் தேதி மெலாக்கா ராயாவில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில், சோதனை மேற்கொண்ட 19 குடிநுழைவு அதிகாரிகளை சுமார் 40-க்கும் மேற்பட்ட குண்டர்கள் சுற்றி வளைத்துத் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.