சென்னை – தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் நடிகர் சங்கத்தின் நடப்பு தலைவரான சரத்குமார் தலைமையில் ஒரு அணியாகவும், நடிகர் விஷால் தலைமையில் மற்றொரு அணியிரும் போட்டியிடுகின்றனர். விஷால் அணி சார்பில் தலைவராக நாசர் போட்டியிடுகின்றார்.
இந்நிலையில், இந்தத் தேர்தல் வேண்டாம் என்று கூறி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், பெப்சி உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து சமரசப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
இதன் காரணமாக, இன்று சரத்குமார் அணியைச் சேர்ந்த ராதிகா, பாக்யராஜ், சிம்பு, மோகன்ராம், ஊர்வசி, பூர்ணிமா ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளனர்.
அதில் சிம்பு பேசுகையில், ”நடிகர் சங்கம் என்பது என்னுடைய குடும்பம். இதை உடைக்க முயற்சித்து வருகின்றனர். இதை, ராதாரவி, சரத்குமார், விஜயகாந்த் போன்றோர் கடுமையாக உழைத்து கொண்டு வந்ததிருக்கிறார்கள். திடீரென வந்து கேள்வி கேட்க யாருடா நீ? என் குடும்பத்தை உடைக்க நீ யாருடா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே நேரத்தில், சரத்குமாருடன் தனிப்பட்ட முறையில் பிரச்சனையுள்ள விஷால், அதை மனதில் வைத்துக் கொண்டு நடிகர் சங்கத்தில் குழப்பம் ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.