Home Featured தமிழ் நாடு தன்னுடன் தம்படம் எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய ஸ்டாலின்! (காணொளியுடன்)

தன்னுடன் தம்படம் எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய ஸ்டாலின்! (காணொளியுடன்)

820
0
SHARE
Ad

stalin kicd02கூடலூர் – கூடலூரில் தன்னுடன் தம்படம் (செல்ஃபி) எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை ஸ்டாலின் தாக்கி உள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘நமக்கு நாமே’ நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ஸ்டாலின் இன்று கூடலூரில் பிரச்சாரக் கூட்டத்தில் மக்களோடு உரையாற்றினார். உரையாற்றி முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்ட ஸ்டாலினுடன், ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தம்படம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரை ஸ்டாலின் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது கேமராவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

எளிமையான அணுகுமுறை கொண்டவராகத் தன்னை காட்டிக் கொண்ட ஸ்டாலினின் இந்த செயல், திமுக வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஒருமுறை மெட்ரோ ரயில் ஒன்றிலும் இளைஞர் ஒருவரை ஸ்டாலின் தாக்கினார்.

#TamilSchoolmychoice

stalin kicd01அப்போது வெளியான காணொளி, தற்செயலாக நடந்தது போல் இருந்ததால் அது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. ஆனால் இப்போது நடந்துள்ள சம்பவத்தில், ஸ்டாலின் அடிப்பது தெளிவாகத் தெரிகிறது. இதற்கு திமுக தரப்பில் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

https://www.youtube.com/watch?v=hqTa0MSGWMg