Home Featured நாடு கோலாலம்பூர் மாநகரசபை ஆலோசனை மன்ற உறுப்பினராக குணசீலனுக்குப் பதிலாக ராஜா நியமனமா?

கோலாலம்பூர் மாநகரசபை ஆலோசனை மன்ற உறுப்பினராக குணசீலனுக்குப் பதிலாக ராஜா நியமனமா?

774
0
SHARE
Ad

Gunaseelan Datukகோலாலம்பூர் – டேவான் பண்டாராயா எனப்படும் கோலாலம்பூர் மாநகரசபையின் ஆலோசனை மன்றத்தின் உறுப்பினராகத் தற்போது டத்தோ மலர்விழி குணசீலன் (படம்) பணியாற்றி வருகின்றார்.

இவரது பதவிக் காலம் நிறைவடைந்து விட்டதாகவும், அவருக்குப் பதிலாக கூட்டரசுப் பிரதேச மாநிலத்தில் செத்தியா வங்சா மஇகா தொகுதியின் தலைவராகவும், மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலச் செயலாளராகவும் இருந்து வரும் ராஜா சைமன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Rajah Symon

#TamilSchoolmychoice

ராஜா சைமன் (படம்) கோலாலம்பூர் மாநகரசபையின் ஆலோசனை மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட, மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவர் டத்தோ எம்.சரவணன் சிபாரிசு செய்துள்ளதாகவும், இந்த நியமனத்திற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியமும் ஒப்புதல் வழங்கிவிட்டதாகவும் மஇகா வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.