Home Featured நாடு மஇகா கூட்டரசுப் பிரதேசச் செயலாளர் ராஜா சைமன் டத்தோ விருது பெறுகின்றார்!

மஇகா கூட்டரசுப் பிரதேசச் செயலாளர் ராஜா சைமன் டத்தோ விருது பெறுகின்றார்!

970
0
SHARE
Ad

Raja Simon-MIC Setiawangsa div chairmanகோலாலம்பூர் – இன்று கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு, மலேசிய மாமன்னரிடமிருந்து டத்தோ விருதுகள் பெறுபவர்களின் பட்டியலில் மஇகா கூட்டரசுப் பிரதேச செயலாளரும், மஇகா செத்தியா வங்சா தொகுதித் தலைவருமான ராஜா சைமனும் இடம் (படம்) பெற்றுள்ளார்.

டத்தோ விருது பெறும் ராஜா சைமன் கடந்த பல ஆண்டுகளாக கூட்டரசுப் பிரதேச மஇகாவில் தீவிர அரசியல் பணி ஆற்றி வந்துள்ளார்.

ஸ்தாப்பாக் ஆயர் பானாஸ் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் அறங்காவலராகவும் ராஜா சைமன் சேவையாற்றி வருகின்றார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே, மாமன்னரிடமிருந்து பிபிஎன் விருதைப் பெற்றுள்ள ராஜா சைமன், 2007ஆம் ஆண்டில் கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு கேஎம்டபிள்யூ விருதையும் பெற்றுள்ளார்.