Home Featured நாடு இன்று மாலையே முக்ரிஸ் பதவி நீக்கம் செய்யப்படலாம்!

இன்று மாலையே முக்ரிஸ் பதவி நீக்கம் செய்யப்படலாம்!

1300
0
SHARE
Ad

mukrizகோலாலம்பூர் –  கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் இன்று மாலையே பதவி நீக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

கெடா மந்திரி பெசார் விவகாரத்தில் முடிவெடுப்பதற்காக இன்று கூடிய கெடா அரசப் பேராளர்கள் மன்றம் அவரை பதவி விலகும் படி கூறியதாகவும், அதற்கு முக்ரிஸ் மறுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

மாநில அதிகாரிகளால் தயார் செய்யப்பட்ட ராஜினாமா கடிதத்தில் முக்ரிஸ் கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மாநில சட்டமன்றத்தில் முக்ரிசுக்கு எதிராக 19 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதால், முக்ரிஸ் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கெடா அம்னோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.