Home Featured நாடு மசீச: லியாவ் தலைமைத்துவத்தின் மீது பலர் நம்பிக்கை இழப்பு!

மசீச: லியாவ் தலைமைத்துவத்தின் மீது பலர் நம்பிக்கை இழப்பு!

695
0
SHARE
Ad

liow-tiong-lai-aug7கோலாலம்பூர் – பாரிசான் உறுப்புக் கட்சிகளுள் ஒன்றான மசீச-வின் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய்-க்கு எதிராக அக்கட்சியில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்புகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக மலாய் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

லியாவின் தலைமைத்துவம் குறித்து முடிவெடுக்க அவசர பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தவும் அக்கட்சி தீர்மானித்து வருகின்றது.

பாரிசானில் அமைதியாக ஒத்துழைப்பு அளித்து வரும் கட்சியாக மசீச இருப்பதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அக்கட்சியின் இந்த முடிவு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

மசீச மீதான மக்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் லியாவிற்கு எதிராக இம்முடிவு எடுக்கப்படவுள்ளது.

வரும் மார்ச் 5-ம் தேதி நடைபெறவுள்ள அக்கட்சியின் 67-வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் போது, இந்த அவசரப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு, 2400 மத்திய பேராளர்களின் வாக்கெடுப்பின் மூலம் லியாவின் தலைமைத்துவம் குறித்த முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மலாய் மெயில் இணையதளம் கூறுகின்றது.