Home Featured தொழில் நுட்பம் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறதா ட்ரூகாலர் செயலி?

பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறதா ட்ரூகாலர் செயலி?

518
0
SHARE
Ad

Truecallerசென்னை – இந்தியாவில் 100 மில்லியன் பயனர்களைக் கடந்த செயலிகளுள் ‘ட்ரூகாலர்’ (Truecaller) செயலியும் ஒன்று. சமீபத்தில் தான் அந்த மைல்கல்லை ட்ரூகாலர் எட்டி உள்ளது.

இந்த செயலி பற்றி பெரிய அளவில் தெரியாதவர்களுக்கு ஒரு சிறு அறிமுகம் தேவைப்படலாம். உங்களுக்கு வரும் அழைப்புகளில் உண்மையானவற்றை அறிந்து கொண்டு, தேவையற்ற ‘ஸ்பேம் அழைப்புகளை’  (Spam Calls) தடை செய்வதற்குப் பயன்படும் செயலி தான் இந்த ட்ரூகாலர். அதுமட்டுமல்லாமல் குறுந்தகவல் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் உள்ளன.

இதுவரை இந்த செயலியை தனிப்பட்ட முறையில் நான் பயன்படுத்தியது இல்லை என்றாலும், சமீபத்தில் நண்பர் ஒருவரின் வற்புறுத்தல் காரணமாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய நேர்ந்தது.

#TamilSchoolmychoice

நண்பர் தனக்கு தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து அழைப்புகள் வருவதாகவும் அது யார் என்று கண்டுபிடிக்கும் படியும் என்னிடம் கேட்டுக் கொண்டார். அதற்காகத் தான் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யச் சொல்லி இருக்கிறார் என்பது அதன் பிறகு தான் தெரியவந்தது.

செயலியையும் பதிவிறக்கம் செய்து விட்டு, அவர் கொடுத்த எண்ணை ட்ரூகாலர் செயலியின் தேடுதல் டேப் (Search)-ல் கொடுத்து தேடத் தொடங்கினேன். அடுத்த சில நொடிகளில் அந்த எண் சார்ந்து ஒருவரின் பெயர் மற்றும் அவரின் மாநிலம் அந்த டேபில் தெரிந்தது. இது மிகவும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனக்கு துளி அளவும் சம்மந்தம் இல்லாத ஒருவரின் பெயரும், மாநிலமும் எனது திறன்பேசியில் தெரிகிறது என்றால் அது தனியுரிமை மீறல் இல்லையா?

மேலும், இதில் பெயரைக் கொடுத்தும் தேடுதல் படலத்தைத் தொடங்கலாம். அதில் மட்டும் சிறிய கட்டுப்பாடு உள்ளது. பேஸ்புக்கில் உள்ளது போல் அவரின் அனுமதி இருந்தாலும் மட்டும் அவரை அணுக முடியும்.

இப்போது வரும் மலிவு விலை திறன்பேசியில் கூட வேண்டாத எண்களை தடை செய்யும் வசதி உள்ள நிலையில், அதற்காக பிரத்யேகமாக ஒரு செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து, கூடவே வம்பை ஏன் இனாமாக வாங்க வேண்டும் என்று தோன்றுகிறது.

– சுரேஷ்