Home Featured தொழில் நுட்பம் புதிய மேம்பாடுகளுடன் செல்லியல் 3.0 தற்போது பதிவிறக்கம் செய்யலாம்!

புதிய மேம்பாடுகளுடன் செல்லியல் 3.0 தற்போது பதிவிறக்கம் செய்யலாம்!

943
0
SHARE
Ad

Selliyal Logo 440 x 215கோலாலம்பூர் – மலேசியாவிலிருந்து தமிழிலும், ஆங்கிலத்திலும் என இரு மொழிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே செல்பேசி குறுஞ்செயலியான ‘செல்லியல்’ தற்போது புதிய தொழில் நுட்ப மேம்பாடுகள் பலவற்றுடன் வெளியீடு கண்டிருக்கின்றது.

செல்லியல் 3.0 என்ற ஆகக் கடைசியான பதிப்பை தற்போது அண்ட்ரோய்ட் பயனீட்டாளர்கள் பிளே ஸ்டோர் (Play store) இணையத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுவரை செல்லியல் குறுஞ்செயலியை தங்களின் செல்பேசிகளில் பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள், தற்போது புதிய பதிப்பை உடனடியாக பதிவிறக்கம் செய்து தங்களின் செயலியை மேம்படுத்திக் கொள்ளும்படி (update) கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

#TamilSchoolmychoice

செல்லியல் குறுஞ்செயலி தகவல் தளத்திலிருந்து அனுப்பப்படும் செய்திகள் உடனடியாக பயனர்களின் செல்பேசிகளில் குறுஞ்செய்தியாக திரையில் தோன்றும் தொழில் நுட்பத்தை செல்லியல் கொண்டிருக்கின்றது என்பது வாசகர்கள் அறிந்ததே.

இனி இந்த தொழில் நுட்பத்தை,  புதிய செல்லியல் 3.0 பதிப்பை பதிவிறக்கம் செய்துள்ளவர்கள் மட்டுமே பெறவும், அனுபவிக்கவும் முடியும் என்பதால் வாசகர்கள் அனைவரும் புதிய பதிப்பை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

தற்போது அண்ட்ரோய்ட் பயனர்களுக்கு மட்டுமே இந்த புதிய பதிப்பு செயல்படும்.

அடுத்த ஓரிரு வாரங்களில் ஐபோன் மற்றும் ஆப்பிள் கையடக்கக் கருவிகளிலும் இந்த செல்லியல் 3.0 பதிப்பு பதிவேற்றம் செய்யப்படும்.

வாருங்கள்! உடனடியாகப் செல்லியல் புதிய பதிப்பை பதிவிறக்கம் செய்து கொண்டு, இந்த அதிநவீன செல்பேசி குறுஞ்செயலித் தளத்தின் மூலம் தமிழில் செய்திகளை உடனுக்குடன் படித்துத் தெரிந்து கொள்ளும் அனுபவத்தைப் பெறுங்கள்!

-செல்லியல் ஆசிரியர் – தொழில்நுட்பக் குழு