Home Featured கலையுலகம் “அம்மாவை நாங்கள் அவமதிக்கவில்லை” தாணுவுக்கு விஷால் கண்டனம்!

“அம்மாவை நாங்கள் அவமதிக்கவில்லை” தாணுவுக்கு விஷால் கண்டனம்!

502
0
SHARE
Ad

vishalசென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு தரும் என அந்த சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளதோடு, தமிழக முதல்வர் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் நாங்கள் வரமாட்டோம் என விஷால் கூறியிருக்கின்றார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ள விஷால் “தமிழக முதல்வர் அம்மாவை தேவையில்லாமல் இதில் சம்பந்தப்படுத்தப் பார்க்கின்றார்கள். அம்மா மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கின்றது. அவரை நாங்கள் எப்போதும் அவமதித்ததில்லை” எனக் கூறியிருக்கின்றார்.

Thanu-Kalaipuliநேற்றிரவு தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது அதன் செய்தியாளரிடம் விஷால் இவ்வாறு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“அம்மா சினிமாவுக்கு பல வகைகளிலும் உதவி வருகின்றார்கள். குறிப்பாக சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப் போவதாக அறிவித்திருக்கின்றார்கள். அதோடு அண்மையில் உடல் நலம் குன்றியிருக்கும் பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மாவுக்கு கணிசமான நிதி உதவியும் வழங்கியிருக்கின்றார்கள். அவரை நாங்கள் மிகவும் மதிக்கின்றோம். தேவையில்லாமல் நாங்கள் அவரை அவமதிப்பதாகக் கூறியிருக்கும் தாணுவை (படம்)  நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்”  என்றும் விஷால் கூறியிருக்கின்றார்.