Home Featured உலகம் துருக்கி தலைநகர் அங்காராவில் குண்டு வெடிப்பு! 20 பேர்வரை பலி!

துருக்கி தலைநகர் அங்காராவில் குண்டு வெடிப்பு! 20 பேர்வரை பலி!

963
0
SHARE
Ad

People try to help a wounded man who was injured in a public bus accident in Ankara, Turkey, October 1, 2015. According to Turkish media, 11 people died and eight people were injured in the bus accident. EPA/OSMANCAN GURDOGAN

அங்காரா (துருக்கி) – துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில் இரண்டு இடங்களில் இன்று வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தில் இதுவரை 20 பேர்வரை கொல்லப்பட்டுள்ளனர். பல பேர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

அங்காராவின் இரயில் நிலைய வளாகத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கின்றது.

#TamilSchoolmychoice

துருக்கி நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவனால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.