Home Featured நாடு மகாதீருக்கு உடல்நலக் குறைவு! இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகின்றார்!

மகாதீருக்கு உடல்நலக் குறைவு! இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகின்றார்!

475
0
SHARE
Ad

Mahathir (500x333)கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட், உடல்நலக் குறைவு காரணமாக அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியை நடத்தவிருந்த மலேசியா டிரெய்ல்பிளேசர்ஸ் சங்கத்தின் (Malaysia Trailblazers Association – MyPerintis) புரவலரான மகாதீர், அந்த சங்கத்தின் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக, அவரால் கலந்து கொள்ள இயலவில்லை என தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தகவல் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

மகாதீரின் உடல்நலக் குறைவைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மகாதீர், காய்ச்சல், நெஞ்சுவலி, இருமல் ஆகியவற்றால் அவதிப்படுகின்றார் என மகாதீரின் அலுவலகத்திலிருந்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.