Home Featured கலையுலகம் மனோரமாவுக்கு ஜெயலலிதா, ரஜினி, உட்பட பிரபலங்கள் நேரில் அஞ்சலி! (படக் காட்சிகள் – தொகுப்பு 1)

மனோரமாவுக்கு ஜெயலலிதா, ரஜினி, உட்பட பிரபலங்கள் நேரில் அஞ்சலி! (படக் காட்சிகள் – தொகுப்பு 1)

1114
0
SHARE
Ad

Manoramaசென்னை – நடிகை மனோரமாவின் மறைவை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். இதற்கிடையில் திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் மனோரமாவின் நல்லுடல் வைக்கப்பட்டிருக்கும் அவரது இல்லம் வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நேரில் வந்து மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்தி மனோரமாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

மனோரமாவின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான இரசிகர்களும், பொதுமக்களும், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

மனோரமாவின் நல்லுடலுக்கு திரைப் பிரபலங்கள் இறுதி மரியாதை செலுத்திய படக் காட்சிகள் சில:-

Rajni-pay respects-manorama

நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்துகின்றார் – அருகில் நடிகர் விஜயகுமார்…

Manorama-Director Vasanth- paying respects

இயக்குநர் வசந்த் மறைந்த மனோரமாவின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றார்.

Kovai Sarala paying respects to Manorama

மனோரமாவுக்குப் பின்னர் முன்னணி நகைச்சுவை நடிகையாக முத்திரை பதித்திருக்கும் கோவை சரளாவின் அஞ்சலி…

Manorama-Ganja Karuppu-paying respects

நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்புவின் இறுதி மரியாதை…

Manorama-Parthiban-paying respects

நடிகர் பார்த்திபன்…

Manorama-Sachu-paying respects

சமகாலத்தில் மனோரமாவுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் பல படங்களில் நகைச்சுவையில் கலக்கிய சச்சுவின் கண்ணீர் அஞ்சலி…

Manorama-Sarath Babu-paying respects

நடிகர் சரத்பாபு….

Manorama-Sharath Kumar-paying respects

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அஞ்சலி செலுத்தியதோடு, மனோரமாவின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது நல்லுடலுக்கு மலர் அலங்கரிப்புக்கான பொறுப்பையும், செலவினங்களையும் ஏற்றுக் கொண்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Manorama-T.Rajender-paying respects

நடிகர் டி.இராஜேந்தர் மனோரமாவின் மகன் பூபதிக்கு அனுதாபம் தெரிவிக்கின்றார்…

-செல்லியல் தொகுப்பு