Home Slider “விஸ்வரூபம் டி.டி.எச்.சில் ஒளிபரப்பாவது உறுதி” – கமல்ஹாசன்

“விஸ்வரூபம் டி.டி.எச்.சில் ஒளிபரப்பாவது உறுதி” – கமல்ஹாசன்

1075
0
SHARE
Ad

ஜனவரி 9 – கமல்ஹாசன் தயாரித்து இயக்கி  நடிக்கும் படம் விஸ்வரூபம். பலத்த சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் இந்த படத்தை முதலில் டி.டி.எச்.சில் ஜனவரி 11 அன்றும் ,திரையரங்குகளில் ஜனவரி 12 அன்றும் வெளியிடுவதாக கமல் அறிவித்திருந்தார். திரையரங்குகளில் வெளிவரும் முன்பே டி.டி.எச்.சில் ஒளிபரப்பும் கமல் முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.டி.டி.எச்.சில் விஸ்வரூபம் வெளியிட்டால் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என அறிவித்தனர். எனினும் கமல் தன் முடிவிலிருந்து மாறாமல் உறுதியாக இருந்தார்.

திரையரங்குகளில் படத்தை வெளியிடுவது குறித்து அபிராமி ராமநாதன் மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் கமலிடம் தொடர்ந்து இரு நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தை முடிவில் கமல் பத்திரிக்கையாளர்களிடம் கூறும்போதுஇந்த படத்தை டி.டி.எச்.சில் ஒளிபரப்ப வேண்டும் என்பது என் சொந்த முடிவு.இது பற்றி எந்த ஒரு முடிவும் எடுப்பது என் விருப்பம்.அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.டி.டி.எச்.சில் இப்படம் ஒளிபரப்பாவதில் எந்த மாற்றமும் இல்லை.

டி.டி.எச்.சிலும், தியேட்டரிலும் ஒரே தேதியில் இப்படம் வெளிவரவேண்டும் என்று சிலர் தெரிவித்தனர். அதை எவ்வாறு வெளியிடுவது என்பது குறித்து நான் முடிவு செய்வேன்.திரையரங்கில் இப்படம் வெளிவரும் தேதியை விரைவில் அறிவிப்பேன் எனக் கூறினார்.