Home Featured நாடு கைதான இணைய ஊடுருவல்காரர் அர்டி கொசோவா நாட்டைச் சேர்ந்தவர்!

கைதான இணைய ஊடுருவல்காரர் அர்டி கொசோவா நாட்டைச் சேர்ந்தவர்!

526
0
SHARE
Ad

handcuffகோலாலம்பூர்- புக்கிட் அமான் கைது செய்துள்ள இணைய ஊடுருவல்காரரான அர்டி ஃபெரிசி என்ற ஆடவர் கொசோவா நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

அமெரிக்க அரசு, ராணுவ ஊழியர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய இணையதளத்தில் ஊடுருவி தகவல்களை திருடியுள்ளார் அர்டி. இதன் பின்னர் அத்தகவல்களை ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்த இரு தீவிரவாதிகளிடம் ஒப்படைத்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.
இதன் பேரில் அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்திருந்தது அமெரிக்க அரசு.

மொத்தம் 1351 அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் தகவல்களை அவர் ஐ.எஸ்., அமைப்பிடம் அளித்துள்ளார். கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் அவர் இக்குற்றத்தைப் புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

இதையடுத்து அர்டியிடம் இருந்து பெற்ற தகவல்களை வைத்து, அமெரிக்க ராணுவம் மற்றும் அரசு இணையதளத்திற்குள் ஊடுருவியதாக ஐ.எஸ்., தீவிரவாதிகளில் ஒருவரான ஹுசேன் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டார். ஐ.எஸ்., இணைய ஊடுருவல் பிரிவு இச்செயலில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தகவல்களைத் திருடிய, அமெரிக்க அரசு இணையதளத்தில் ஊடுருவிய அர்டியை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது.