Home Featured கலையுலகம் அனைவரையுமே பூச்சி போல் நசுக்கிவிடுவேன்: ராதாரவி ஆவேசம்

அனைவரையுமே பூச்சி போல் நசுக்கிவிடுவேன்: ராதாரவி ஆவேசம்

468
0
SHARE
Ad

சென்னை- நடிகர் சங்கத் தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் ஆவேசமும், ஆபாச – கோபாவேச விமர்சனங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன.

சரத்குமார் அணியை எதிர்ப்பவர்களை பூச்சியைப் போல் நசுக்கிவிடப் போவதாக ராதாரவி வெள்ளிக்கிழமையன்று பேசியபோது ஆவேசப்பட்டார்.

விஷால் அணிக்கு நடிகர் கமல் ஆதரவளித்தது குறித்து பேசிய அவர், “கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா? என கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

Vishal group-complaint to Police Commissionerஇதற்கிடையில் நாளை நடைபெறவிருக்கும் தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து காவல் துறையில் புகார் செய்த விஷால் அணியினர்…

வெள்ளிக்கிழமை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் நடிகர் ராதாரவி பேசுகையில், தமது தந்தையும் காலஞ்சென்ற நடிகருமான எம்.ஆர்.ராதா நடிகர் சங்கத்துக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டதாகவும், அவை குறித்து தற்போதுள்ள எஸ்.வி.சேகர் போன்ற நடிகர்களுக்கு ஏதும் தெரியவில்லை என்றும் கூறினார்.

“எஸ்.வி.சேகர் போன்றவர்களுக்கு நடிகர் சங்கத்தின் வரலாறு தெரியவில்லை. தற்போது ஒரு பூச்சிதான் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. நான் தற்போது மேடையில் நின்று கொண்டிருக்கிறேன். சட்டைக்கு மேல் ஒரு பூச்சி இருந்தால் அதை தட்டிவிடுவோம். அதே பூச்சி கழுத்தில் உட்கார்ந்து கடித்தால் அதை நசுக்கத்தானே செய்வோம்,” என்றார் ராதாரவி.

நடிகர் சங்க விவகாரத்தில் சரத்குமார் அணியைத் தொடர்ந்து எதிர்த்து வரும் நடிகர் பூச்சி முருகனை மறைமுகமாகக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு பேசியதாகத் தெரிகிறது. மேலும் நடிகர் சங்க கட்டடம் தொடர்பாக வழக்கு தொடுத்தவரும் இந்தப் பூச்சி முருகன்தான்.

“வரும் 18ஆம் தேதி இரவு வரட்டும், அனைவரையும் நசுக்கிவிடுவேன். கமல் குறித்து விமர்சிக்கலாமா? என்று கேட்கிறார்கள். கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா? கமலும், நானும் அரை சட்டை அணிந்த காலத்திலேயே நண்பர்கள். இருவரும் மாறி மாறி ஏசிக் கொள்வோம். என்னைப் பொறுத்தவரையில் சினிமாவில் யாரும் நிரந்தரம் கிடையாது,” என்றார் ராதாரவி.

ஜெயம் ரவி, ஜீவாவை ரகசியமாக சந்தித்தாரா ராதாரவி?

இதற்கிடையே இளம் நடிகர்கள் ஜெயம் ரவி, ஜீவா ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் வைத்து ராதாரவி ரகசியமாக சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

விஷாலின் ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்ட இருவரையும், இத்தேர்தல் சமயத்தில் வெளியே காண முடியவில்லை. விஷால் அணியுடன் பிரசாரத்திலும் ஈடுபடவில்லை. விஷாலுடன் இருவருக்கும் கருத்து வேறுபாடு எனக் கூறப்படும் நிலையில், ஜெயம் ரவியையும், ஜீவாவையும் சந்தித்துள்ளார் ராதாரவி.

எனினும் விஷால் தரப்பு இதுகுறித்து அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.

வாக்குப் பெட்டிகளுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கக் கூறி புகார்

Vishal-speaking to reporters-after lodging repportகாவல் துறையில் புகார் செய்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றும் விஷால்…

நடிகர் சங்கத் தேர்தல் நாளை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்குப் பின்னர் வாக்குப் பெட்டிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட வேண்டும் என நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வியாழக்கிழமை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விஷால் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.

????????????????????????????????????

காவல் துறையில் புகார் அளித்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றும் நாசர்…