Home Featured கலையுலகம் நடிகர் சங்கத் தேர்தலில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப் பதிவு தொடங்கியது!

நடிகர் சங்கத் தேர்தலில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப் பதிவு தொடங்கியது!

579
0
SHARE
Ad

Rajni-Cine Artistes Assoc-Votingசென்னை – இங்கு மைலாப்பூரில் உள்ள சிறப்பு வாக்களிப்பு மையத்தில் ஒட்டு மொத்த தமிழகமும், உலகமெங்கும் உள்ள சினிமா இரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் பரபரப்பாகத் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது.

இன்று காலை 5.30 மணிக்கே தேர்தலை நடத்துகின்ற குழுவினர் வாக்களிப்பு மையத்திற்கு வந்து முன்னேற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினர்.

காலை 7.00 மணி முதற்கொண்டே நடிகர்கள் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக வந்து வாக்களிக்கத் தொடங்கினர்.

#TamilSchoolmychoice

நடிகர் ரஜினிகாந்தும் காலையிலேயே வந்து வாக்களித்தார். மேலே காண்பது ரஜினி இன்று காலை வாக்களிக்க வந்தபோது எடுக்கப்பட்ட படம்.