சென்னை – நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குபதிவுகள் இன்று காலை முதல் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர்கள் ரஜினி, விஜய் உள்ளிட்டோர் காலை 7.30 என்ற அளவிலேயே வாக்குச் சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
வாக்குபதிவு செய்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “இந்த தேர்தலில் வெற்றிப்பெறப்போகும் அணிக்கு எனது வாழ்த்துகள். மற்றும் என்னுடைய இரண்டு கோரிக்கைகள் இதுமட்டுமே!
ஒன்று, தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றவேண்டும்.
இரண்டாவது, கொடுத்த வாக்கினை மறவாமல் நிறைவேற்றுங்கள். முடியவில்லையென்றால் உடனே ராஜினாமா செய்துவிடுங்கள்!” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றப்படும் என சரத்குமார் அணியினர் ஏற்கனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.