Home Featured கலையுலகம் காலை 9 மணி வரை 350 வாக்குகள் பதிவு – 5 மணிக்கு நிறைவு –...

காலை 9 மணி வரை 350 வாக்குகள் பதிவு – 5 மணிக்கு நிறைவு – 9 மணிக்குள் முடிவுகள்!

575
0
SHARE
Ad

South Indian Cine Artistes associationசென்னை – சுறுசுறுப்பாக வாக்குப் பதிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் இன்று காலை 9.00 மணிக்குள் சுமார் 350 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடைபெற்று வரும் வாக்குப் பதிவு இன்று மாலை 5.00 மணிக்கு நிறைவடையும்.

அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இன்று இரவு இந்திய நேரப்படி 9.00 மணிக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் திரண்டு வந்து இன்றையத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

சச்சுவுக்கு வாக்களிப்பு மறுப்பு

நடிகை சச்சு வாக்களிக்க இன்று வந்தபோது அவரிடம் உரிய, உறுப்பினர் அட்டை முறையாக இல்லை என்ற காரணம் காட்டி, அவருக்கு வாக்களிப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அதே போல மன்சூர் அலிகானுக்கும் வாக்களிப்பு மறுக்கப்பட்டுள்ளது.