Home Featured நாடு நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த கேள்விக்கு புன்னகைத்த பிரதமர்!

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த கேள்விக்கு புன்னகைத்த பிரதமர்!

472
0
SHARE
Ad

najib1கோலாலம்பூர் – தன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்துள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்.

தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 2.6 பில்லியன் ரிங்கிட் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை சுட்டிக் காட்டி, பிகேஆர் கட்சியின் பெட்டாலிங் ஜெயா செலாத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளதை எண்ணி கவலையடைகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்துவிட்டு கடந்துள்ளார் நஜிப்.

தேசிய பாதுகாப்பு ஆணையம் தொடர்பான விவகாரம் ஒன்றிற்கு பதிலளிக்க பிரதமர் நஜிப் இன்று நாடாளுமன்றம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice