Home Featured உலகம் மெக்சிகோ: நீரில் மூழ்கிய 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேவாலயம் மீண்டும் எழுச்சி!

மெக்சிகோ: நீரில் மூழ்கிய 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேவாலயம் மீண்டும் எழுச்சி!

527
0
SHARE
Ad

churchமெக்சிகோ – மெக்சிக்கோ நாட்டில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு நீரில் மூழ்கிய தேவாலயம் ஒன்று தற்போது முற்றிலும் வெளியே தெரிவதால், அப்பகுதி மக்கள் பரவசமடைந்துள்ளனர்.

மெக்சிகோவின்  நெசஹுவால்கோயோட்ல் நீர்த்தேக்கத்தில் அதிக வறட்சியின் காரணமாக 82  அடிக்கு நீர் குறைந்துள்ளது. இதனால் ஆற்று நீரில் மூழ்கிக் கிடந்த  183 அடி உயரமுள்ள இந்த தேவாலயம் தற்போது வெளியில் தெரிகிறது.

இந்த தேவாலயம் 16 ம் நூற்றாண்டின் மத்தியில், ப்ரெய்ர் பார்ட்டோலோம் டி லா கஸாஸ் என்கிற பாதிரியாரின் தலைமையில், இப்பகுதியைச் சேர்ந்த மக்களால் நிறுவப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

#TamilSchoolmychoice

வறட்சியால் தவித்த மக்களுக்கு ஆறுதலாக இந்த தேவாவலயம் வெளியே தெரிந்து அனைவரையும் பரவசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.