நியுயார்க்: அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கு இடையிலான தடுப்புச் சுவரை கட்டுவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காவிட்டால் நாட்டில் அவசர நிலையை அறிவிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னதாகத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தடுப்புச் சுவரை கட்டுவதன் மூலம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் மெக்சிகோ மற்றும் இதர நாட்டினரை தடுக்கலாம் என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். அத்திட்டத்தை செயல்படுத்துவதில் அவர் திட்டவட்டமாக இருந்தார்.
இதற்காக ஐந்து பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கும்படி டிரம்ப் நிருவாகம் நாடாளுமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. ஆயினும், ஜனநாயக கட்சி இந்த தடுப்புச் சுவரை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டிரம்புக்கும், ஜனநாயக கட்சிக்கும் சமரசம் ஏற்படாததால் வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட ஒன்பது அரசு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் அந்த துறைகள் முடங்கின.
இந்த விவகாரத்தில், சட்ட நடவடிக்கை மூலம் டிப்ரப் அறிவித்த அவசர நிலையை முடிவுக்குக் கொண்டு வர, அவருக்கு எதிராக நியுயார்க் உள்பட பதினாரு மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.