Home நாடு ரந்தாவில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் கண்டறியப்படுவார்!- அஸ்மின்

ரந்தாவில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் கண்டறியப்படுவார்!- அஸ்மின்

738
0
SHARE
Ad

காஜாங்: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலை அடுத்து ரந்தாவ் சட்டமன்றத்திலும் இடைத் தேர்தல் நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 14-வது பொதுத் தேர்தலில் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் முகமட் ஹசானின் வெற்றியை சிறப்பு தேர்தல் நீதிமன்றம் இரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பின்னர், தேர்தல் ஆணையமும், முகமட் ஹசானும் அந்த உத்தரவுக்கு, கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். நேற்று, அந்த மேல்முறையீட்டை, கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து ரந்தாவ் சட்டமன்றத்தில் போட்டியிட இருக்கும் வேட்பாளரை கூடிய விரைவில் கட்சி கண்டறியும் என பிகேஆர் கட்சித் துணைத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்தார். இது குறித்து நம்பிக்கைக் கூட்டணி சந்திப்புக் கூட்டத்தில் பேசப்படும் என அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ரந்தாவ் தொகுதி பாரம்பரியமாக பிகேஆர் கட்சி பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள போதிலும், நம்பிக்கைக் கூட்டணியில் தாங்கள் பேச்சு வார்த்தைகளின் வழி முடிவு எடுப்பதை முன்னிலைப் படுத்துவதாக அஸ்மின் குறிப்பிட்டார்.

2018-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி , சிரம்பான் சிறப்பு தேர்தல் நீதிமன்றம், டாக்டர் ஶ்ரீராமின் மனுவை ஏற்று, 14-வது பொதுத் தேர்தலில் முகமட் ஹசானின் வெற்றியை இரத்து செய்தது. அத்தொகுதியில் முகமட் ஹசான் போட்டியின்றி வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.