Home நாடு நிக்கல் டேவிட்: ஸ்குவாஷ் விளையாட்டின் வீராங்கனை ஓய்வு பெறுகிறார்!

நிக்கல் டேவிட்: ஸ்குவாஷ் விளையாட்டின் வீராங்கனை ஓய்வு பெறுகிறார்!

983
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஸ்குவாஷ் விளையாட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, உலக அரங்கில் நாட்டின் பெருமையை நிலை நாட்டிய தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை, நிக்கல் டேவிட், 2018/19-ஆம் ஆண்டுக்கான பிரோபேஷனல் ஸ்குவாஷ் அச்சோசியேஷன் (Professional Squash Association) போட்டியோடு வருகிற ஜூன் மாதத்தில் ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். 

ஒன்பது ஆண்டுகளாக உலக சாதனைகளைப் படைத்து 35 வயது நிரம்பிய நிக்கலின் இந்த முடிவு, மலேசிய மக்களிடத்தில் ஒரு வித சோகத்தை ஏற்படுத்தினாலும், அவரது அயராது உழைப்பும், விளையாட்டுத் திறனையும் சமூக ஊடகங்களில் மக்கள் புகழ்ந்து வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

நான் ஒன்பது ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்தது, எனது நேர்மையான வெற்றிக்கு கிடைத்தப் பரிசு என நம்புகிறேன். தற்போது அவ்விடம் எனதல்ல என இருக்கும் போது, அதற்கான நேரம் வந்துவிட்டதாக எண்ணி விலகுகிறேன். என்னுடைய இந்த சாதனைக்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்என பிஎஸ்ஏ வலைத்தளத்தில் வெளியான அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.