கோலாலம்பூர்: முன்னாள் தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை நிக்கல் டேவிட் உலகின் சிறந்த விளையாட்டாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இயங்கலை வாயிலாக நடந்த வாக்கெடுப்பில் அவருக்கு 318,943 வாக்குகள் கிடைத்தன.
எட்டு முறை உலக வெற்றியாளரான நிக்கல், ஜனவரி 8- ஆம் தேதி தொடங்கப்பட்ட வாக்கெடுப்பில் 318,943 வாக்குகளைப் பெற்ற நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர் 200,000 வாக்குகளைப் பெற்றார்.
“இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதும், அனைத்து மலேசியர்களிடமிருந்தும், ஸ்குவாஷ் சமூகத்தினரிடமிருந்தும் வலுவான ஆதரவைப் பெறுவது எனக்கு ஒரு மரியாதை.
“மற்ற உலக முன்னணி விளையாட்டு வீரர்களுடன் நான் பட்டியலிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விருதுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த வெற்றி ஸ்குவாஷ் விளையாட்டு மீதான உலகின் கவனத்தை அதிகரிக்கும் என்று நம்புகிறேன். எனது நாட்டையும் ஆசியாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமைமிக்க தருணம் இது,” என்று 37 வயதான நிக்கல் கூறினார்.
113,120 வாக்குகளைப் பெற்ற ஐரிஷ் விளையாட்டாளர் ஜேம்ஸ் கெஹோ இரண்டாவது இடத்தில் இடம்பெற்றார்.