Home One Line P2 ஆஸ்ட்ரோ : பிப்ரவரி 7 வரையிலான தொலைக்காட்சி, ராகா வானொலி நிகழ்ச்சிகள்

ஆஸ்ட்ரோ : பிப்ரவரி 7 வரையிலான தொலைக்காட்சி, ராகா வானொலி நிகழ்ச்சிகள்

464
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இந்த வாரத்தில் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் ஒளிபரப்பாகவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களையும், ராகா வானொலியில் ஒலியேறவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களையும் இங்கே காணலாம்:

திங்கள், 1 பிப்ரவரி

அசுர வேட்டை (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

நடிகர்கள்: ஹரிதாஸ், சங்கீதா கிருஷ்ணசாமி, பானுமதி & வெமன்னா அப்பனா

சில்வா எனும் தடயவியல் புலனாய்வாளர், அவர் பதிவு செய்தக் குற்றக் காணொளிகளில் இடம்பெற்ற இறந்தவர்கள் அக்காணொலிகள் வாயிலாகத் தன்னைத் தொடர்பு கொள்வதை உணர்கிறார். அவரது அன்பான மனைவி தன்னை விட்டு விலகவே அவரது வாழ்க்கை வீழ்ச்சியடையத் தொடங்குகிறது. மேலும், தொடர்ச்சியான இணைக்கப்பட்ட, சந்தேகத்திற்கிடமான கொலைகள் அவரது வேலையில் நேரத்தை வியமாக்கின. ஒவ்வொரு கொலையும் அதன் காட்சியும் அவரை பயமூட்டவே சில்வா இனி ‘அதனைப்’ புறக்கணிக்க முடியாது என்பதை உணர்கிறார்.

இப்படிக்கு இலா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), இரவு 8 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: ஹரிந்தரா நந்த குமார், தனேஷ் ரூபன் அலகராசு, சஷ்வின் சந்திரசேகரன், யுவராஜ் கிருஷ்ணசாமி, கே. பிரகாஷ் & கிரானா ராமச்சந்திரன்

1990-இல் பிறந்த இலக்கியன் என்ற சிறுவனின் அப்பாவித்தனம், ஆர்வம் மற்றும் குறும்புத்தனம் ஆகியவை அவனைத் தொடர்ந்துத் தனது தாயுடன் சிக்கலுக்குள்ளாகவே அவனது தந்தை அவனுக்கு ஆதரவளித்தார். சன்வே புறநகரில் உள்ள ஒரு பிளாட்டில் வசிக்கும் இலா எனும் சிறுவனின் மூன்று வெவ்வேறு கட்டங்களில் அவனது வாழ்க்கையை இக்கதை விவரிக்கிறது. ஒவ்வொரு கட்டமும் 90-ஆம் ஆண்டுகளின் சகாப்தத்தை சித்தரிக்கின்றது. அதே நேரத்தில், இலாவின் பெற்றோருடனான அவனது உறவை வெளிக்கொணர்கிறது.

மூன்றாவது கண் (புதிய அத்தியாயங்கள் – 32-34)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

ராணா இன்னும் ஒரு குழப்பத்தில் சிக்கியுள்ளார். அவர் தனது அணியை முழுமையாக நம்ப விரும்பவில்லை.

யார்? (புதிய அத்தியாயங்கள் – 41-45)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

குரு தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்க்கு தள்ளப்படுகிறார்.

வியாழன், 4 பிப்ரவரி

பரீக்‌ஷா (Pareeksha) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஆதில் உசேன், பிரியங்கா போஸ் & சுபம் ஜா

பீகாரில் உள்ள ஒரு ரிக்‌ஷா ஓட்டுநரின் கதை. தனது மகனுக்கு ஒரு தனியார் ஆங்கில பள்ளியில் படிக்க ஏற்பாடு செய்வதன் மூலம் சிறந்த தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று கனவு காண்கிறார்.

வெள்ளி, 5 பிப்ரவரி

அந்தகாரம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: வினோத் கிஷன் & அர்ஜுன் தாஸ்

மூன்று பேரின் வாழ்க்கையில் நிகழும் அமானுஷ்ய நிகழ்வுகள் மூவருக்கும் இடையிலானத் தொடர்பை வெளிப்படுத்துகின்றன.

சனி, 6 பிப்ரவரி

சவன் படோன் (Sawan Bhadon) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)


கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: ரேகா & நவீன் நிஸ்கோல்

விக்ரம் என்ற செல்வந்தர், அவரது பேராசைக் குணம் கொண்ட மாற்றாந்தாய், சுலோச்சனா மற்றும் அவரது சகோதரியின் காதலன், மதன் ஆகியோரால் அவர்களின் திட்டங்களில் தலையிட்டதற்காகக் கொல்லப்படுகிறார். இருப்பினும், விக்ரம் பாதிப்பில்லாமல் தோன்றும்போது அவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.

ஞாயிறு, 7 பிப்ரவரி

சமையல் சிங்காரி (இறுதி அத்தியாயம் – 13)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

சமையல் நிபுணர் : சாந்தி ராஜ்
தொகுப்பாளர்: விக்கி ராவ்

உள்ளூர் சமையல்காரர் சாந்தி ராஜ் உடன் பலவகையான சுவையான சமையல்களைக் காண்பிக்கும் சமையல் நிகழ்ச்சியான சமையல் சிங்காரி நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம்.

விக்கி ராவ் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க டேனேஸ் குமார், மகேன் விகடகவி, ஷீசே, பாஷினி சிவகுமார், ஹேமாஜி, ராகாவைச் சேர்ந்த அஹிலா மற்றும் உதயா, யாஸ்மின் நடியா, குபேன் மகாதேவன், சுபாஷினி அசோகன், சாந்தினி பி.சுபாஷ்சந்திர போஸ், தேவகுரு சுப்பையா மற்றும் மகேஸ்வரி கண்ணசாமி (மாலா அம்லு) ஆகிய உள்ளூர் பிரபலங்கள் இடம் பெறுவர்.

இந்நிகழ்ச்சி வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவு முறை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். அதே நேரத்தில் அழிந்து போகக்கூடிய பொருட்களிலிருந்து அழகுக் குறிப்புகளை உருவாக்குதல், சமையலறையில் உடற்பயிற்சிகளுக்கான யோசனைகள் போன்ற வாழ்க்கை முறை குறிப்புகளும் இந்நிகழ்ச்சியில் பகிரப்படும்.

ராகாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்

செவ்வாய், 2 பிப்ரவரி

நேர்காணல்: மூட்டு வலி

ராகா, காலை 8-9 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: டாக்டர் ஈஸ்வரன், எலும்பியல் நிபுணர்

மூட்டு வலி மற்றும் அதைக் கையாளும் உதவிக் குறிப்புகள் ஆகியவற்றைப் பகிர்ந்துக் கொள்ளும் எலும்பியல் நிபுணர், டாக்டர் ஈஸ்வரனின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன்பெறலாம். தான் தயாரித்த சிறிய பொம்மைகளை விற்று அதிலிருந்து பெரும் வருமானத்தை நன்கொடையாக வழங்குவதன் மூலம் கோவிட்-19 நோயாளிகளுக்கு உதவ முன்வந்திருக்கும் 10 வயது சிறுமியான, தமிழ் இலக்கியா ரவிச்சந்திரனின் நேரலையை ராகாவின் இன்ஸ்டாகிராம்-இல் லிரசிகர்கள் கண்டுக் களிக்கலாம்.

வியாழன், 4 பிப்ரவரி

கலந்துரையாடல்: புற்று நோயிலிருந்துக் குணமடைந்தவர்கள்

ராகா, காலை 7-8 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் புற்றுநோயைக் கையாள்வதற்கான உதவிக்குறிப்புகள் உட்பட இரசிகர்கள் தங்களின் அனுபவத்தை அழைத்துப் பகிர்ந்துக் கொள்ளலாம். மேலும், புற்றுநோய் நோயாளிகளை ஊக்குவிக்கும் மற்றும் எழுச்சியூட்டும் வெற்றிக் கதைகளையும் இரசிகர்கள் பகிர்ந்துக் கொள்ளலாம்.

வெள்ளி, 5 பிப்ரவரி

நேர்காணல்: ராகாவின் இம்மாத நட்சத்திரங்கள்

ராகா, காலை 8-9 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: வர்மன் இளங்கோவன், விவேக் & மெர்வின்

உள்ளூர் இசை இயக்குநர் மற்றும் பாடகர் வர்மன் இளங்கோவன்; மற்றும் இசையமைப்பாளர்கள், இசை இயக்குநர்கள், இசை தயாரிப்பாளர்கள் மற்றும் பாடகர்கள், விவேக் மற்றும் மெர்வின் ஆகியோரின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டு இரசிக்கலாம்.. ‘ராகாவின் இம்மாத நட்சத்திரங்களான’ அவர்கள் மூவரும் அவர்களின் வெற்றிக் கதைகள், அனுபவங்கள், அற்புதமான தருணங்கள் மற்றும் பலவற்றை ராகாவின் இன்ஸ்டாகிராம் வழியாக பகிர்ந்துக் கொள்வர்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை