Home One Line P1 டாக்டர் ஞானபாஸ்கரனுக்கு ‘டத்தோ’ விருது

டாக்டர் ஞானபாஸ்கரனுக்கு ‘டத்தோ’ விருது

494
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அரசியல், சமூகம், பொதுச் சேவை, மருத்துவம் என பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அளப்பரிய சேவைகளை வழங்கியிருக்கும் டாக்டர் என்.ஞானபாஸ்கரனுக்கு கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு ‘டத்தோ’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்த பின்னர் நாடு திரும்பிய பின்னர் மிக இளம் வயது முதலே ஞானபாஸ்கரன் அரசியல் சமூகப் பணிகளில் ஈடுபட்டார்.

ஜோகூர் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஞானபாஸ்கரனின் தந்தையார் நடேசன் செட்டியாரும் ஜோகூர் மாநில மஇகா அரசியலிலும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு பல்வேறு நற்பணிகளுக்கு தாராளமாக நன்கொடைகளையும் தனது பங்களிப்பையும் வழங்கியவராவார்.

#TamilSchoolmychoice

முதலில் மஇகா அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டிய ஞானபாஸ்கரன் இரண்டு தவணைகளுக்கு (1984, 1987) மிக அதிகமான வாக்குகளோடு மத்திய செயற்கு உறுப்பினராக தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மஇகாவின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி திரட்டித் தருவதில் முன்னணி வகித்தவர் ஞானபாஸ்கரன்.

பல்வேறு பணிகளுக்கும் இடையில் தொடர்ந்து மருத்துவத் துறையிலும் ஈடுபட்டு வந்த அவர் கடந்த ஆண்டில் மலேசிய மருத்துவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டை கொவிட்-19 சூழ்ந்திருந்த முக்கியமான காலகட்டத்தில் மருத்துவ சங்கத் தலைவராகத் தனது பணியை ஆற்றிய அவர் அடிக்கடி ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் கொவிட்-19 விழிப்புணர்வு குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து வந்தார்.

தனது 71-வது வயதில் இன்னும் பொதுச்சேவையில் தீவிர ஈடுபாடு காட்டிவரும் அவரது 45 ஆண்டுகால பயணத்திற்குக் கிடைத்த பொருத்தமான அங்கீகாரமாக அவருக்கு இன்று வழங்கப்பட்டிருக்கும் டத்தோ விருது கருதப்படுகிறது.