பெட்டாலிங் ஜெயா : கடந்த 50 ஆண்டுகளாக மலேசிய இந்திய சமூகத்தின் அரசியல், சமூக பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருபவர் டாக்டர் என்.ஞான பாஸ்கரன். மருத்துவத் துறையிலும் தீவிர ஈடுபாட்டுடன் செயலாற்றி வரும் அவர் மலேசிய மருத்துவர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
அவர் மட்டுமல்ல! அவரது தந்தை நடேசன் செட்டியாரும் ஜோகூர் மாநிலத்தில் மஇகா அரசியலிலும் பல்வேறு சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர். தந்தையின் சமூக சேவைப் பாதையை தொடர்ந்த டாக்டர் பாஸ்கரன், தன் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளின் சமுதாய பங்களிப்பையும் அரசியல் ஈடுபாட்டையும் வணிகம் சார்ந்த மற்ற துறைகளின் செயல்பாட்டையும் விரிவாக விளக்கும் சுய வரலாற்று நூலை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் இந்த நூல் வெளியீடு காணவிருக்கிறது. ‘வரலாறு கண்ட சகாப்தம் – மூன்று தலைமுறையின் பயணம்’ – என தமிழ் நூலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஆங்கில நூல் ‘A Legacy of Time: Tale of 3 Generations’ என்ற பெயரில் வெளியீடு காண்கிறது.
இந்த நூல் வெளியீட்டு விழா குறித்த விவரங்களை நேற்று புதன்கிழமை மார்ச் 13-ஆம் தேதி நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாஸ்கரன் வெளியிட்டார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 31 ஆம் தேதி, பெட்டாலிங் ஜெயாவிலுள்ள தோட்ட மாளிகையில் (NUPW Hall) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.30 மணிவரை இந்த நூல் நூல் வெளியீட்டு விழா நடைபெறும்.
தங்கள் குடும்பத்தின் நேரடி அழைப்பாகக் கருதி இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அனைவரும் வருகை தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட டாக்டர் பாஸ்கரன், இந்த நூல் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் தொகை பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிதிகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நூல் வெளியீட்டு விழா குறித்த மேல் விவரங்களுக்கும், கலந்து கொள்வதற்கும் கீழ்க்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்: