Home One Line P1 ஸ்குவாஷ் விளையாட்டில், மலேசியா முதன்மை நாடாக உதிக்க நிக்கல் விருப்பம்!

ஸ்குவாஷ் விளையாட்டில், மலேசியா முதன்மை நாடாக உதிக்க நிக்கல் விருப்பம்!

1070
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்ற பின்னர் முதல் முறையாக மீண்டும் ஸ்குவாஷ் விளையாட்டில் களம் இறங்க உள்ளாதாக மலேசிய தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை டத்தோ நிக்கல் டேவிட் தெரிவித்தார். ஆயினும், இது எதிர்கால விளையாட்டாளர்களை ஊக்குவிக்கும் களமாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை தொடங்கி, இரண்டு நாட்களுக்கு ‘தி ட்ரீம் ரிமெயின்ஸ்நிகழ்ச்சியில், 36 வயதான நிக்கல், இரு இளைஞர்களுக்கு தம்முடன் விளையாடி தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள, இந்த பொன்னான வாய்ப்பை வழங்கி உள்ளார்.

தேசிய விளையாட்டு மன்றம் மற்றும் மலேசிய ஸ்குவாஷ் கழகம் (எஸ்ஆர்ஏஎம்) ஆகியவற்றின் ஆதரவுடன் நிக்கல் ஏற்பாடு செய்ய உள்ள போட்டி நிகழ்ச்சியில் புக்கிட் ஜாலிலில் உள்ள தேசிய ஸ்குவாஷ் மையத்தில் ஓர் இளைஞனும், ஒரு பெண்ணும் தங்கள் வாழ்நாளில் நிக்கலுடன் விளையாடும் வாய்ப்பைப் பெற இருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய நிக்கல், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்த பின்னர், இரண்டு நாட்களுக்கு 133 ஜூனியர் வீரர்களுக்கான போட்டி மற்றும் ஸ்குவாஷ் பட்டறையை நடத்துவது தனது இரசிகர்கள் மற்றும் விளையாட்டுக்கு அவர் அளிக்கும் பங்களிப்பின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்துள்ளார்.

நான் ஓய்வு பெற்ற பிறகு, மலேசியா எதிர்கால ஸ்குவாஷ் மையமாக மாறி, சிறந்த தொழில்முறை வீரர்களை நாட்டிற்கு மீண்டும் கொண்டுவருவதற்காக தொடர்ந்து உலகத் தரம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை நடத்துவதே எனது கனவு. இளம் வீரர்களை ஊக்குவிக்க, இங்கே விளையாடும் சிறந்த ஸ்குவாஷ் வீரர்களைப் பார்த்து, அவர்கள் மலேசிய இரசிகர்களின் ஆதரவைப் பெற விரும்புகிறேன்.” என்று அவர் கூறினார்.