Home One Line P1 நிக்கல் டேவிட் விளையாட்டு அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்!

நிக்கல் டேவிட் விளையாட்டு அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்!

850
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: எட்டு முறை உலக ஸ்குவாஷ் வெற்றியாளரான டத்தோ நிக்கல் ஆன் டேவிட், மற்ற மலேசிய விளையாட்டு வீரர்களை ஊக்கமளிக்கும் பேச்சுக்களால் இனி ஊக்குவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நான் நிறைய உரைகளைத் தொடங்க விரும்புகிறேன். உள்ளூர் விளையாட்டு வீரர்களுடன் நானும் இருப்பேன். நம் விளையாட்டு வீரர்கள் எதுவரை செல்லலாம் என்பதைப் பார்க்க இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நம்புகிறேன்.” என்று நேற்று செவ்வாய்க்கிழமை அவர் இவ்வாறு கூறினார்.

முன்னாள் ஸ்குவாஷ் வீராங்கனையான நிக்கலுக்கு,  மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு அறிவியல் துறையில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

தேசத்துக்காக விளையாட்டு அரங்கில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதில் நிக்கல் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.