ஹூஸ்டன்: கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹூஸ்டனில் நடந்த ‘ஹவுடி, மோடி!’ நிகழ்ச்சியின் போது, உலகின் மிக சக்திவாய்ந்த அரசியல்வாதிகளாகப் பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் படம் எடுத்த சிறுவனுக்கு சமூக வலைப்பக்கங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அச்சிறுவனுக்குக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு அது என்று மக்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
என்ஆர்ஜி அரங்கிற்குள் பிரதமர் மோடியை, டிரம்ப் அழைத்துச் செல்லும்போது அப்படம் எடுக்கப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகள் குழு அவர்களை வரவேற்றது.
பிரதமர் மோடியும், டிரம்பும் குழந்தைகளுடன் உரையாடிய போது, சத்விக் ஹெக்டே, எனும் கர்நாடகவைச் சிறுவன் இரு தலைவர்களிடமும் புகைப்படம் (செல்ஃபி) எடுக்குமாறு கேட்டுக் கொண்டான். அதற்கு இணங்க, இரு தலைவர்களும் மகிழ்ச்சியுடன் அச்சிறுவனுடன் அப்படத்தினை எடுத்துக் கொண்டனர்.
இது தொடர்பான காணொளியை, இந்திய பிரதமரின் அலுவலகம் (பிஎம்ஓ) டுவிட்டரில் பகிர்ந்திருந்தது.
50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க இந்தியர்கள் ‘ஹவுடி, மோடி!’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.