Home Featured இந்தியா பாலியல் பலாத்கார குற்றத்திற்கு மரண தண்டனை – கெஜ்ரிவால் அரசு அதிரடி!

பாலியல் பலாத்கார குற்றத்திற்கு மரண தண்டனை – கெஜ்ரிவால் அரசு அதிரடி!

623
0
SHARE
Ad

Arvind Kejriwal,புதுடெல்லி – சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் குற்றத்திற்கு துாக்கு தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ அளிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உயர்மட்ட குழுவை அமைத்துள்ளார்.

டெல்லியில் சமீப காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கருத்தில் கொண்டு நேற்று  தனது சக அமைச்சர்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி வருகிறது. பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையின் நடவடிக்கையில் அதிருப்தி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதேவேளையில், சிறார் குற்றவாளிகளுக்கான வயதை 18-ல் இருந்து 15 ஆகக் குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த இருக்கிறோம் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.