Home Featured கலையுலகம் “பத்து எண்றதுக்குள்ள” – “நானும் ரௌடிதான்” – எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 2 படங்கள் இன்று வெளியீடு!

“பத்து எண்றதுக்குள்ள” – “நானும் ரௌடிதான்” – எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 2 படங்கள் இன்று வெளியீடு!

667
0
SHARE
Ad

pathu-enrathukulla-imagesகோலாலம்பூர் – ‘ஐ’ படத்திற்குப் பின்னர் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படம் – ‘கோலிசோடா’வில் மிரள வைத்த விஜய் மில்டனின் இயக்கம் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசின் தயாரிப்பு – என பல சிறப்புகளுடன் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் படம் ‘பத்து எண்றதுக்குள்ள’.

எதிர்பார்த்த பட்ஜெட்டை விடத் தாண்டிவிட்டது என்ற தகவல்களும் சென்னை சினிமா வட்டாரங்களில் கசிகின்றன, இந்தப் படத்தைப் பற்றி!

இந்தியாவின் பல பகுதிகளில் பயணம் செய்யும் விக்ரம்-சமந்தா ஜோடியைப் பின்னனணியாகக் கொண்ட கதையமைப்பு – சிறந்த நடிகர்கள் ஜேக்கி ஷரோப், பசுபதி போன்றவர்களும் இணைந்திருப்பது – என மேலும் சில எதிர்பார்ப்புகளும் இணைந்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

நானும் ரௌடிதான்

Naanum Rowdithan-poster

தேர்ந்தெடுத்துப் படங்கள் பண்ணும் விஜய் சேதுபதி, கதாநாயகனாக முதன் முறையாக நயன்தாராவுடன் இணையும் படம் இது.

தனியாகவே ‘மாயா’ மூலம் இரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்த்து வசூல் மழை பொழிய வைத்த நயன்தாரா முக்கிய நடிகர்கள் பலருடன் இணைவது – தனுஷ் தயாரிப்பு – அனிருத் இசை – என்பது போன்ற மற்ற சில அம்சங்களும் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

பார்த்திபன், ராதிகா, போன்ற நட்சத்திரங்களின் அணிவகுப்பும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த இரண்டு படங்களின் திரை விமர்சனங்களும் இன்று செல்லியலில் வெளியாகும். படிக்கத் தவறாதீர்கள்.