Home Featured நாடு பழனிவேல் தரப்பு மேல்முறையீட்டு அனுமதியை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது!

பழனிவேல் தரப்பு மேல்முறையீட்டு அனுமதியை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது!

625
0
SHARE
Ad

Palanivel Subra Comboபுத்ராஜெயா – முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர், சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்த வழக்கின் இறுதிக் கட்ட மேல் முறையீடாக,  கூட்டரசு நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்திருந்த முன் அனுமதி கோரிக்கையை கூட்டரசு நீதமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சங்கப் பதிவகத்திற்கும் எதிராகவும், மீண்டும் மஇகாவைக் கைப்பற்றவும் பழனிவேல் தரப்பினர் மேற்கொண்டிருந்த முயற்சிகள் ஒரு முடிவுக்கு வருகின்றன.

மஇகாவை வழிநடத்தும் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் தலைமைத்துவம் இந்தத் தீர்ப்பின் மூலம் மறு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதோடு, இனி மஇகா தேர்தல்களும் முழு வீச்சில், பரபரப்பான பிரச்சாரங்களோடு சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice